Monday, 2 January 2012

திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் 1.08 லட்சம் லட்டு தயாரிக்கும் பணி

ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் ஒரு லட்சத்து எட்டாயிரம் லட்டு தயாரிக்கும் பணி, திருப்பூரில் நடைபெற உள்ளது; லட்டு தயாரிக்கும் பணியில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:வரும் 5ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா, அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடைபெற உள்ளது. திருப்பூர் விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் நடைபெறும் விழாவுக்குரிய ஏற்பாடுகளை ஸ்ரீவாரி டிரஸ்ட் செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இந்த ஆண்டு ஒரு லட்சத்து எட்டாயிரம் லட்டுக்களை தயார் செய்ய உள்ளோம். அதற்கு தேவையான பருப்பு, ஏலக்காய், மாவு, முந்திரி பருப்பு, முந்திரி பழம், நெய், எண்ணெய் முதலிய பொருட்களை பக்தர்களும், டிரஸ்ட் நிர்வாகமும் மேற்கொண்டு வருகிறது. இந்தாண்டு லட்டுக்களை தயார் செய்யும் பணி, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள காமாட்சியம்மன் மண்டபத்தில் நாளை (3ம் தேதி) நடைபெற உள்ளது. லட்டு தயாரிக்கும் சேவை பணியில் பங்கேற்க பக்தர்கள் நேரில் வரலாம். மேலும் விவரங்களுக்கு, 90800 85052; 98940 22095.

No comments:

Post a Comment