Wednesday, 4 January 2012

திருப்பூரில் புத்தாண்டு தினத்தில் சரக்கு விற்பனை 3.66 கோடி

                                    
கடந்த ஆண்டு "டாஸ்மாக்' மதுபான விற்பனை, 870 கோடியை ரூபாயை கடந்துள்ளது; புத்தாண்டு தினத்தில் மட்டும் 3.66 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்றுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 250 "டாஸ்மாக்' மதுக்கடைகள் உள்ளன. நகர பகுதியில் உள்ள மதுக்கடைகளில் தினமும் சராசரியாக மூன்று லட்சம் ரூபாய்; ரூரல் பகுதிகளில் உள்ள கடைகளில் சராசரியாக 80 ஆயிரம் ரூபாய் வரை மதுபான விற்பனை நடக்கிறது; தினமும் இரண்டு கோடி முதல் 2.50 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்கிறது; சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில், விற்பனை ஒரு கோடி ரூபாய் கூடுதலாகிறது. மாவட்டத்தில் மாதந்தோறும் 70 கோடி ரூபாய் வரை மதுபான விற்கப்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டில், "டாஸ்மாக்' மதுக்கடைகளில் 870 கோடி, 32 லட்சத்து 35 ஆயிரத்து 945 ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டை காட்டிலும், 150 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை உயர்ந்துள்ளது. 20 லட்சத்து 67 ஆயிரத்து 739 கேஸ் (பெட்டிகள்) "ஹாட்' சரக்குகள், 10 லட்சத்து 65 ஆயிரத்து 678 கேஸ், பீர் ரகங்கள் விற்றுள்ளன.
புத்தாண்டு தினத்தில் (1ம் தேதி) மட்டும் மூன்று கோடியே 66 லட்சத்து 69 ஆயிரத்து 805 ரூபாய்க்கு மதுபானம் விற்றுள்ளது; 8,741 கேஸ் "ஹாட்' மதுபானங்கள், 5,714 கேஸ் பீர் ரகங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2010ம் ஆண்டில் 720 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்ற நிலையில், 2011ம் ஆண்டில், 870 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது; சாயத்தொழில் பிரச்னை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு
மத்தியிலும், 150 கோடி ரூபாய் சரக்கு விற்பனை அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment