கோவை அருகே மாங்கரையில் ஒற்றை புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவில் மக்கள் வெளியே தலை காட்ட முடியாமல் தவிக்கின்றனர்.
கோவை வனக்கோட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை முதல் முறையாக புலி இருப்பது ‘வெப் கேமரா‘ மூலம் உறுதி செய்யப்பட்டது. காரமடை, பெரியநாயக்கன்பாளையம் வனசரகத்திற்குஉட்பட்ட பகுதியில் தலா ஒரு புலி தென்பட்டது. இதர வனத்தில் புலிகள் இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் நீடித்து வருகி றது.
இந்நிலையில், ஆனைகட்டி பிரதான சாலை மாங்கரையில் ஒற்றைப் புலி சுற்றிக் கொண்டிருப்பதை மக்கள் பார்த்தனர்.
மாங்கரை குடியி ருப்புகளில் இரவு நேரத்தில் வீட்டின் கதவை புலி தனது காலால் சுரண்டுகிறது. வீடுகளை சுற்றியும் புலி உறுமலுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று முன் தினம் பிரதான சாலையில் புலி நடமாடியிருக்கிறது. வாகனங்களில் சென்றவர்கள், அதைப் பார்த்து பீதியடைந்தனர்.
மாங்கரை காட்டிற்குள் வனத்துறையின் ‘வாட்ச் டவர்‘ இருக்கிறது.
இங்கேயும் புலி சுற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. புலி நடமாட்டத்தால் ‘வாட்ச் டவர்‘ செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
மாங்கரை பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ இந்த பகுதியில் வனத்துறை செக்போஸ்ட், தங்கும் விடுதி, இயற்கை மருத்துவ மையம், குடியிருப்பு, நாற்றங்கால் பண்ணை போன் றவை இருக்கிறது. புதிதாக இங்கே புலி ஒன்று வந்துள்ளது.
புதர் மறை வில் பதுங்கியிருந்து இரவில் ஊருக்குள் சுற்றி கொண்டிருக்கிறது. சில நேரம் நாய் களை விரட்டுகிறது. சாலையைக் கடந்து பல முறை சென்றுள்ளது. குடியிருப்புகளில் சில கோழிகளை காணவில்லை. ஏற்கனவே இந்த பகுதியில் யானைகள் அட்டகாசம் அதிகமாக இருக்கிறது. புதிதாக புலியும் வந்து விட்டதால், இரவில் வெளியே செல்ல முடியவில்லை. இரவு 7 மணிக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறோம்.
புலியை அடர்ந்த காட்டிற்குள் விரட்டி விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என்றனர்.