Monday, 2 January 2012

படிக்க விருப்பம் இல்லாததால் மாணவி தற்கொலை

                                
உடுமலை அருகேயுள்ள சின்னபாப்பனூத்து கிராமத்தை சேர்ந்தவர் அருளானந்தன். இவரது மகள் லாவண்யா(வயது17). இவர் தேவனூர் புதூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
 
படிப்பில் லாவண்யாவுக்கு விருப்பம் இல்லை. ஆனால் அவரது தந்தை நன்றாக படி என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். இது லாவண்யாவுக்கு பிடிக்கவில்லை.
 
தந்தையின் வற்புறுத்தலால் மனமுடைந்த லாவண்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
இது குறித்து தளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2 comments:

  1. thaai mattum kaaranamaaka irukkaathu.. padippai kasappaakkiya aasiriyaraiyum appalliyaiyum thandikka vendum

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது மிக சரி. பதிவு செய்ததற்கு நன்றி நண்பரா

    ReplyDelete