தானே
புயல் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல்
தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் தொடர்ந்து தூறல் மழை
பெய்தது. நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்தது. திருப்பூர்
மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடித்தது.
நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-
அவினாசியில்
13 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 10 மில்லி மீட்டரும், திருப்பூரில் 11
மில்லி மீட்டரும், மூலனூரில் 14 மில்லி மீட்டரும், உடுமலையில் 7 மில்லி
மீட்டரும், தாராபுரத்தில் 20 மில்லி மீட்டரும், காங்கயத்தில் 12.8 மில்லி
மீட் டரும் மழை பெய்து உள்ளது.
அணைப்பகுதியான
அமராவதி அணையில் 13 மில்லி மீட்டரும், திருமூர்த்தி அணையில் 13.5 மில்லி
மீட்டரும், நல்லாறில் 9.5 மில்லி மீட்டரும், உப்பாறில் 12 மில்லி மீட்டரும்
மழை பெய்து உள்ளது. நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்ததால்
வீதிகளில் பொதுமக்கள் நடமாட முடியவில்லை. பிரதான ரோடுகளில் வாகன போக்கு
வரத்து குறைந்து இருந்தது.
குடைகளை ஏந்தியும்,
மழைக்கோட்டு அணிந்து கொண்டும் பொதுமக்கள் நடமாடினார்கள். இதனால்
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த
நிலையில் திருப்பூர் காங்கயம் கிராஸ் ரோட்டில் உள்ள திருப்பூர் மாநகராட்சி
யின் 44&வது வார்டு கவுன்சிலர் நஜ்முதீனின் ஓட்டு வீடு நேற்று
மதியம் 12 மணி அளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. தொடர் மழை காரணமாக
சுவர் நனைந்து இருந்ததால் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதனால் ஓட்டு
மேற்கூரையும் அப்படியே சரிந்தது. அப்போது வீட்டின் மற்றொரு அறையில் இருந்த
நஜ்முதீனின் மனைவி உமைரா பானு, மகள் சபனா பானு ஆகியோர் அதிர்ஷ்ட வசமாக
உயிர் தப்பினார்கள்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு
தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள்
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வீட்டுக்குள்
இருந்த பீரோ, மேஜை, கட்டில் உள்ளிட்டவை சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால்
நேற்று அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தூறல் மழை
பெய்து வருவதால் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்குமாறு
மாவட்ட கலெக்டர் எம்.மதிவாணன் உத்தரவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment