திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த
திங்கட்கிழமை இரவு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. கடையில் இருந்த 45 கிலோ தங்க
நகை, 2 கிலோ வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 12
கோடியாகும்.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தை
சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். நகைக் கடையில்
கொள்ளையடித்தவர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
கொள்ளை
நடைபெற்ற அன்று திருப்பூரில் வாகன சோதனை நடத்தப்பட்டது. மேலும்
லாட்ஜ்களிலும் சோதனை நடந்தது. இன்று அதிகாலை முதல் திருப்பூரில் வீடு,
வீடாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
மாவட்ட
போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது.
டி.எஸ்.பி. ராஜாராமன், வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் 400
போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பூர்
லட்சுமி நகர், பேப்ரிக்கேசன் ரோடு உள்ளிட்ட மாநகரம் முழுவதும் சோதனை
நடத்தப்பட்டது. அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும்
இந்த சோதனை நடைபெற்றது.
வெளி மாநிலத்தவர்கள், வெளி
மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகம் தங்கி உள்ள பகுதிகளில் தீவிரமாக சோதனை
நடத்தினார்கள். அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய சோதனை பகலிலும் நீடித்தது.
அப்போது உரிய ஆவணம் இல்லாமல் தங்கி இருந்தவர்கள், வாகனத்திற்கு முறையான
சான்று இல்லாதவர்கள், ரேசன் கார்டு இல்லாதாவர்கள் போலீசில் சிக்கினார்கள்.
இதுதவிர
நண்பர்களுடன் தங்கி இருந்தவர்களும் பிடிபட்டனர். அவர்களது கைரேகைகளை பதிவு
செய்தனர். சோதனையின் போது சுமார் 500 பேர் போலீசில் பிடிபட்டனர். அவர்களை
திருப்பூர் டவுன் ஹாலுக்கு கொண்டு சென்றனர். அங்கு விசாரணை நடைபெற்றது.
விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் தகவல்களையும் போலீசார் சேகரித்தனர்.
திருப்பூரில் இன்று நடந்த போலீசாரின் இந்த அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment