Saturday, 21 January 2012

திருப்பூர் புத்தக கண்காட்சி குறித்த அனைத்து தகவல்களையும் புகைப்படத்துடன் இணையத்தில் வெளிடப்படும்.


திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் சென்னை பாரதி புத்தகாலயம் சார்பில் வரும் 25ல் புத்தக கண்காட்சி நடக்கிறது. கண்காட்சி குறித்த தகவல்களை இணையதளத்தில் வெளியிடுவது குறித்து, கண்காட்சி அமைப் பாளர்கள், சேர்தளம் வலைப்பதிவர் குழும நிர்வாகிகள் இடையிலான ஆலோசனை கூட்டம், கே.ஆர்.சி., சிட்டி சென்டரில் நேற்று நடந்தது.கண்காட்சி வரவேற்பு குழு பொருளாளர் நிசார் அகமது பேசியதாவது: பின்னலாடை நகரான திருப்பூரில், ஏற்றுமதி, தொழில் குறித்து மட்டுமே சிந்திக்கும் மக்களிடம் புத்தக ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பதற்காக, ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. கண்காட்சி யாக மட்டும் இல்லாமல், திருப்பூர் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடும் புத்தக திருவிழாவாக நடைபெற இருக்கிறது. கண்காட்சி நடைபெறும் ஒவ்வொரு நாளும் பட்டிமன்றம், பாட்டு மன்றம், மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இன்றைய காலத்தில் கருத்துக்களை பலதரப்பட்ட மக்களிடம் கொண்டு செல்வதில் இணையத்தின் பங்கு மிகவும் அதிகமாக உள்ளது; புத்தக கண்காட்சி குறித்த தகவல்களை இணைய தளத்தில் வெளியிடுவதன் மூலம், அதிகளவு வாசகர்கள், பொதுமக்கள் பயனடைவர், என்றார்.சேர்தளம் வலைப்பதிவர்கள் குழும தலைவர் ரமேஷ் பேசுகையில், ""கண்காட்சி குறித்த அனைத்து தகவல்களையும் புகைப்படத்துடன் இணையத்தில் வெளியிடுவதற்கான முழு ஒத்து ழைப்பையும் சேர்தளம் முன்னின்று செய்யும்; கண்காட்சிக்கு வருவோர் இணைய பயன்பாடு குறித்து அறிந்து கொள்ளும் வகையில், "இணையதள பிரிவு' அமைக்கப்படும்,'' என்றார்.

2 comments:

  1. தங்களிடம் திருப்பூர் பற்றிய மேலும் பல பதிவுகள் எதிர் பார்கிறேன்(தங்களின் comment பகுதியில் இருக்கும் word verification ஐ நீக்கினால் நன்றாக இருக்குமே)

    ReplyDelete
  2. word verification ஐ நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் நண்பரா

    ReplyDelete