Wednesday, 7 March 2012

மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகை

                                
திருப்பூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியின் ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறு ப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று (7ம் தேதி) மாலை 3 மணிக்கு திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் வளாகத்தில் உள்ள ‘க்ரீன் வேலி அரங்கத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் நேர்காணல் நடக்கிறது.
மாலை 3 மணியளவில் வேலன் ஓட்டலில் நடக்கும் நேர்காணலில் பங்கேற்கும் ஸ்டாலின், நேர்காணல் நிகழ்ச்சியைத் தொட ர்ந்து, மாலை 5.30 மணிக்கு திருப்பூர் தாராபுரம் சாலை, ரிங்ரோடு பிரிவில் அமைந்துள்ள தி.மு.க. மாவட்ட தி.மு.க. அலுவலகமான ‘கலைஞர் அறிவாலயம்‘ திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

No comments:

Post a Comment