பல்லடம் - அவிநாசி ரோட்டில், மங்கலம் பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய தொழில்நுட்பத்தில் கட்டப்படும் உயர்மட்ட பாலம் பணி ஆறு மாதத்தில் நிறைவு பெறும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், பல்லடம் -
அவிநாசி ரோட்டில், நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. பாலம் திட்ட வடிவமைப்பு கடல்களில் அமைக்கப்
படும் பாலம்போல், "பைல்ஸ்' எனப்படும் பெரிய அளவிலான இரும்பு குழாய்கள் இயந்திரங்கள் மூலம் தரையில் அடித்து இறக்கப்பட்டு, அதிலிருந்து
கான்கிரீட் பில்லர்கள் அமைக்கப்படுகின்றன.
புதிய வடிவமைப்பு அடிப்படையில், ஆற்றுப்பகுதிகளில், தலா 40 அடி ஆழத்துக்கு, 32 "பைல்ஸ்'
அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, இருபுறமும்
"அபார்ட்மென்ட் சைடு வால்' எனப்படும் துவக்க பகுதி பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே, தரையில் அடித்து இறக்கப்பட்ட "பைல்ஸ்' பகுதியில், குறிப்பிட்ட அளவுக்கு குழி அமைத்து, "பைல்ஸ்
கான்கிரீட்'கள் உடைக்கப்படுகின்றன.
கான்கிரீட் கம்பிகள் எடுக்கப்பட்டு, மேற்பகுதியில் அமையவுள்ள பாலம் பகுதியுடன் இணைக்கும் வகையில், பைல்ஸில் தற்போதுள்ள கம்பிகள் எடுக்கப்படுகின்றன. பின், கம்பிகள் இணைக்கப்பட்டு கான்
கிரீட் போடப்படுகிறது. தொடர்ந்து, 4 பில்லர்கள் "டி' வடிவில் அமைக்கப்படுகின்றன. இப்பாலம் பணி, ஆறு மாதத்தில் முடிவடையும் என நெடுஞ்லைத்
துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment