Tuesday, 6 March 2012

திருப்பூரை காலி செய்யும் வட மாநிலத்தவர்கள்

தொடர் குற்றச்சம்பவங்கள் காரணமாக, திருப்பூரில் உள்ள வட மாநிலத்தவர்கள் மீது போலீஸ் கெடுபிடி அதிகரித் துள்ளது. இதனால், பலர்,
திருப்பூரை காலி செய்து, சொந்த மாநிலத்துக்கு திரும்பிச் செல்கின்றனர்.
திருப்பூரிலுள்ள பனியன் நிறுவனங்கள், கட்டுமான துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்
களுக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. அதன் காரணமாக, வேலை வாய்ப்பு குறைவாக உள்ள தென்மாவட்ட மக்கள், திருப்பூருக்கு வரத்துவங்கினர். 60 சதவீத மக்கள், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக, பீகார், உத்தரபிரதேசம்,
ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்களும் வேலை தேடி திருப்பூர் வரத்துவங்கினர். 30 ஆயிரம் பேர் வரை, தற்போது திருப்பூர்
மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ளனர். எதிர்பார்த்ததைவிட, கூடுதல் கூலி, வேலைப்பளு குறைவு காரணமாக ரயில்கள் மூலம் அதிகளவு தொழிலாளர்கள் திருப்பூர் வரத்துவங்கினர்.
கடந்த பிப்., 21ல், திருப்பூர் ஆலுக்காஸ் ஜூவல்லரியில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போயின. போலீ
சாரின் முதல்கட்ட விசாரணையில், கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதனால், திருப்பூரில் தங்கியிருந்த வட மாநிலத்தவர்கள் அனைவரையும் போலீசார்
கண்காணிக்க துவங்கினர்.
வடமாநிலத்தவர்கள் அனைவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ஒரே சமயத்தில் அனைத்து ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும்
இப்பணி நடந்தது. 800க்கும் மேற்பட்டவர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டதோடு,
சந்தேகத்துக்குரிய நபர்களிடம் தங்கள் பாணியில் போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
இதே கால கட்டத்தில்,
மாநிலம் முழுவதும் அரங்கேறிய குற்றச்சம்பவங்கள் பெரும்பாலானவற்றில் வட மாநிலத் தவர் தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும், வாடகைக்கு வீடு அனுமதித்துள்ளவர்கள் தங்கியிருப்பவர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும்;
கம்பெனிகளில் பணியில் உள்ள வர்கள் குறித்து முழு விபரங்
களையும் தர வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.
வட மாநில தொழிலாளர் களை அழைத்து வரும் புரோக்கர்களையும் போலீசார் எச்சரித்துள்ளனர். போலீசாரின் பிடி இறுகியுள்ளதோடு, உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும் இல்லாதால் திருப்பூரிலுள்ள வட மாநில தொழிலாளர்கள் பலர் திருப்பூரை காலி செய்து வருகின்றனர்.
ரயில்வே அதிகாரிகள்
கூறுகையில், "வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ரிசர்வேஷன் செய்வதில்லை. திருப்பூர் வழியாக வட மாநிலங்களுக்கு தினமும் நான்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஐதராபாத் பகுதிக்கு சராசரியாக 180 பேர் டிக்கெட் எடுத்துச் செல்கின்றனர்,' என்றனர்.

No comments:

Post a Comment