Tuesday, 6 March 2012

வாடகைக்கு குடியிருப்போர் விவரம் தராத வீட்டு உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை

திருப்பூரில் குற்ற விசாரணை நடைமுறைச்சட்டம் அமலுக்கு வந்தது. வாடகைக்கு குடியிருப்போர் பற்றிய விவரங்களை வீட்டு உரிமையாளர்கள் போலீசாரிடம் தெரிவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன், எஸ்பி., பாலகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பூரில் சமீப காலங்களில் தேவையில்லாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. காவல் துறை நடத்திய ஆய்வுகளின் முடிவில் திருப்பூரில் வசிக்கக் கூடிய வெளிமாநிலத்தவர்கள்  குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது.
எனவே இது போன்ற குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும் குற்றங்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறியுவும் மாவட்டத்தில் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 144 (சிஆர்பிசி) 5ம்தேதி (நேற்று) முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி திருப்பூர் மாவட்டத்தில் வீட்டின் உரி¬ மயாளர்கள், வீடு மற்றும் கட்டிடங்களை பிறருக்கு வாட கைக்கு விடும் போது வாடகைதாரரின் முழு விவரங்களைப் பெற்று அதனை அருகில் உள்ள காவல் நிலையத்தில் கொடுக்க வேண்டும்.
திருப்பூரில் வெளிமாவட்ட மற்றும் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அதிகம் இருப்பதால் இச்சட்டம் டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களைத் தொடர்ந்து தற்போது திருப்பூர் நகரில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
காவல் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம் தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பங்களில் புதிதாக வாடகைக்கு வந்துள்ளவரின் புகைப்படம், முன்னர் வசித்த முகவரி, தற்போது வேலை செய்யும் பகுதி அல்லது தொழில், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, எத்தனை நாள் வசிப்பார்கள் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து வீட்டின் உரிமையாளர்கள் போலீசாரிடம் கொடுக்க வேண்டும். 60 தினங்களுக்குள் இவ்விவரங்களை வீட்டின் உரிமையாளர்கள் காவல் நிலையத்திற்கு வாடகைதாரரின் விவரங்களை கொடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் விச £ரணை அல்லது காவல்துறை ஆய்வின் போது வாடகைதாரரின் விவரங்கள் தராதது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர் மீது 188 பிரிவு சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். தங்கும் விடுதிகளில் தினமும் அறிக்கை சரிபார்க்கப்பட்டு வருகிறது. அங்கு வாடிக்கையாளர்களிடம் முழு விவரங்கள் பெறுவதில்லை.
 வாடிக்கையாளரின் செல் போன் எண்களும் சரியாக இருப்பதில்லை. தங்கும் விடுதிகளில் சரியான முழு விவரங்கள் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
 இவ்வாறு பெறப்படும் விவரங்கள் குற்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் குற்றம் செய்தவர்களைக் கண்டறியவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment