திருப்பூர் ராயபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் விளையாட
அனுமதிக்காமல், விரட்டியடிப்பதாக, அப்பகுதி மக்கள் புகார்
தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் ராயபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான பார்க் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளது. ரோட்டுக்கு அருகில் பூங்காவும், ராஜவிநாயகர் கோவில் அருகில் மூன்று ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானமும் உள்ளது. நகர பகுதியில், குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால், இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. தினமும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
காலை, மாலை நேரங்களில் பெண்கள் "வாக்கிங்' டிராக்கில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவர்கள், மைதானத்தில் கிரிக்கெட், வாலிபால் விளையாடி வருகின்றனர். விடுமுறை நாட்களில் அதிகளவு மாணவர்கள் மைதானத்துக்கு வருகின்றனர். மைதானத்தில் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களை விளையாட அனுமதிக்காமல், பாதுகாவலர் விரட்டியடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று விட்டு, மாலை நேரங்களில் மைதானத்துக்கு விளையாட செல்வர். இங்குள்ள முக்கிய நபர்கள் சிலர் பூப்பந்து விளையாட மாலை நேரத்தில் வருகின்றனர். அவர்கள் விளையாடுவதற்கு தடையாக உள்ளதால், மாணவர்களை அனுமதிக்க மறுக்கின்றனர். விளையாட சென்ற மாணவர்களை அடித்தும் விரட்டியுள்ளனர். நடைபயிற்சி மேற்கொள்ள தனி டிராக்கும், ஷெட்டில்கார்க், கிரிக்கெட், வாலிபால் என ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனி இடம் உள்ளது. குழந்தைகள், சிறுவர்களுக்கு எனவும் தனியாக விளையாட்டு சாதனங்கள் உள்ளன.
மைதானத்தை சிலர் ஆக்கிரமித்துக் கொண்டு, மாணவர்களை விளையாட அனுமதிக்க மறுக்கின்றனர். பாதுகாவலரும் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார். அனைவரையும் விளையாட அனுமதிக்க வேண்டும், என்றனர்.
பாதுகாவலர் ரங்கசாமியிடம் கேட்ட போது, ""மாணவர்கள் அமைதியாக விளையாடுவதில்லை. கிரிக்கெட், வாலிபால் விளையாடும் போது மற்றவர்களுக்கு சிரமம்
ஏற்படுகிறது. எனவே, சிறுவர்கள், மாணவர்களை உள்ளே அனுமதிப்
பதில் லை,'' என்றார்.

No comments:
Post a Comment