Thursday, 22 December 2011

திருப்பூர் மாவட்டத்தில் மீன்குஞ்சு பண்ணை அமைக்க 50 சதவீத மானியம்

                                                                  
 
       திருப்பூர் மாவட்டத்தில் மீன்குஞ்சு பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் அளிக்கப்பட உள்ளது. இதற்கான தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் பட்டுள்ளன. ÷இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன் விடுத்துள்ள அறிக்கை: மீன் வளத்துறையின் சார்பில் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2011-12ம் ஆண்டுக்கு திருப்பூர் மாவட்டத்தில் மீன்குஞ்சு உற்பத்திப் பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் அளிக்கப்பட உள்ளது.÷ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யக் கூடியதாக அமைக்கப்படும் மீன்குஞ்சு உற்பத்திப் பண்ணைக்கு இம்மானியம் வழங்கப்படும். அதற்கான இடம் தகுதியானதாகவும், வெள்ள அபாயம் உள்ள பகுதிக்கு வெளியேயும் இருக்க வேண்டியது அவசியம். தவிர, தரமான நிலநீர் அல்லது ஆற்றுப் பாசனப் பகுதியில் மின்வசதி, சாலை வசதி கொண்டதாகவும் இருக்க வேண்டும். ÷மீன் குஞ்சு உற்பத்தி மையம் புதிதாக அமைக்க 2 ஹெக்டேர் சொந்த நிலம் அல்லது 10 ஆண்டு குத்தகைக்குப் பெற்றிருக்க வேண்டும்.தேவைக்கும் அதிக விவசாயிகள் விண்ணப்பித்தால் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். ÷விருப்பமுள்ளவர்கள் மீன்வள உதவி இயக்குநர், உள்நாட்டு மீன்வளம், எண் 4, எஸ்வி காம்ப்ளக்ஸ், வீரப்பம்பாளையம் பிரிவு, பெருந்துறை சாலை, திண்டல் அஞ்சல், ஈரோடு -12 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.                       

No comments:

Post a Comment