Tuesday, 20 December 2011

தாராபுரம் நகர்மன்ற துணைத் தலைவரிடம் திருட்டு

தாராபுரம் நகர்மன்ற துணைத் தலைவரின் ஜீப்பில் வைத்திருந்த ரூ.2.85 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மூவர் கும்பலைப் போலீஸார் தேடி வருகின்றனர். தாராபுரம் நகர்மன்றத் துணைத் தலைவர் கோவிந்தராஜ் (50). திங்கள்கிழமை பகலில் பெரியகடை வீதியில் உள்ள வங்கியில் ரூ.2.85 லட்சம் எடுத்துக் கொண்டு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். சங்கர் மில் அருகே சென்றபோது ரோட்டோரத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிச் செல்வதைப் பார்த்தார். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு குழாய் உடைப்பு சரி செய்யப்படுவதைப் பார்வையிட்டு வந்தார். இவரது ஜீப்புக்கு அருகே நின்றிருந்த மூவர் கும்பல் ரூ.2.85 லட்சத்தை திருடியதாகத் தெரிகிறது. சிறிது நேரம் கழித்து ஜீப்புக்கு வந்த கோவிந்தராஜ் பணத்தைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூவர் கும்பலைத் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment