Wednesday, 21 December 2011

பொள்ளாச்சியில் கடையடைப்பு

முல்லைப்பெரியாறு பிரச்னைக்காக பொள்ளாச்சியில் இருந்து கேரளா செல்லும் அனைத்து போக்குவரத்தும் இன்று நிறுத்தம் செய்யப்படுகிறது. பொள்ளாச்சியிலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு கேரள அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை அமல்படுத்தாமல், புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கேரள அரசை கண்டிக்கும் வகையில், தமிழக - கேரளா எல்லை பகுதியில் இன்று (21ம் தேதி) முற்றுகை போராட்டம் நடத்த ம.தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது. பொள்ளாச்சியில் இருந்து கேரளா செல்லும் முக்கிய வழித்தடங்களான வளந்தாயமரத்தில் ஆனைமலை ஒன்றிய ம.தி.மு.க.,வினர் முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் கோபாலபுரத்தில் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு தலைமையில் ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். பொள்ளாச்சி அடுத்த நடுப்புணியில் ம.தி.மு.க., எம்.பி., கணேசமூர்த்தி தலைமையில் முற்றுகை போராட்டம் நடக்கிறது. பொள் ளாச்சி அனைத்து அச்சக உரிமையாளர்கள் சங்கத்திலும் இன்று கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். 150க்கும் மேற்பட்ட பிரின்டிங் பிரஸ், கம்ப்யூட்டர் சென்டர்கள் இன்று கடையடைப்பு செய்யப்படுகின்றன. பொள்ளாச்சியிலுள்ள கேரள சமாஜத்தில் நடந்த அவசர கூட்டத்தில், "முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும், கேரள சமாஜம் முழுஆதரவும், ஒத்துழைப்பும் கொடுக்கும். பொள்ளாச்சியில் வாழும் மலையாள மக்கள் அனைவரும் வியாபார நிறுவனங்களுக்கும், தொழில்நிறுவனங்களுக்கும் இன்று விடுப்பு அறிவித்து கடையடைப்பு செய்ய வேண்டும்' என்று அறிவித்துள்ளது. பொள்ளாச்சி சிறு வியாபாரிகள் சங்கம், வியாபாரிகள் சங்கம், ஓட்டல்கள், பேக்கரிகள் அசோசியேஷன், பொள்ளாச்சி தையல் கலைஞர்கள் சங்கம் சார்பிலும் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. டெம்போ, வேன் ஓட்டுனர்கள் மற்றும் டூரிஸ்ட் வேன் ஓட்டுனர்கள் சங்கத்தினர் இன்று வேலைநிறுத்தம் செய்கின்றனர்.பஸ்கள் ஓடும்: பொள்ளாச்சி - கேரளா பஸ் போக்குவரத்து மட்டும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருந்த பிற மாவட்டத்திலும், உள்ளூர்களுக்கும் இயக்கப்படும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கும் என்று அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி சப்ளை பாதிப்பு தமிழக - கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு பிரச்னை தொடர்பாக பதட்டம் நிலவி வருகிறது. பொள்ளாச்சிக்கு கேரள வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளது. காய்கறி ஏலம் எடுக்கவும், எல்லையிலுள்ள வியாபாரிகள் மட்டுமே வருகின்றனர்.கேரளாவுக்கு காய்கறி சரிவர கொண்டு செல்லப்படாததால், உள்ளூர் சந்தையிலேயே சரக்குகள் தேங்கியுள்ளன. குறிப்பாக, பல நாட்களாக பெல்லாரி வெங்காயம் தேங்கியுள்ளதால் அழுகி வருகிறது. மேலும், சில வெங்காயம் வீணாகி செடி முளைத்துள்ளதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.பொள்ளாச்சி மார்க்கெட் வெங்காய வியாபாரிகள் கூறியதாவது: தமிழக - கேரள எல்லையில் பதட்டம் நிலவி வருவதால், பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பெல்லாரி வெங்காயத்தில், 30 சதவீதம் மட்டுமே அனுப்பப்படுகிறது. நேற்று (நேற்று முன்தினம்) முதல் லாரி லோடு ஏற்ற லாரி உரிமையாளர்கள் முன்வராததால், கேரளாவுக்கு செல்ல வேண்டிய சரக்குகள் சந்தையிலேயே தேங்கியுள்ளது. இதனால், விலையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கேரள வியாபாரி
களும் சந்தைக்கு காய்கறி ஏலம் எடுக்க வருவதில்லை. இதே நிலை தொடர்ந்தால், சந்தையில் தேங்கி இருக்கும் சரக்குகள் வீணாகி, வியாபாரிகள் நஷ்டம் அடையும் நிலை ஏற்படும், என்றனர். வர்த்தகம் ஸ்தம்பிப்பு முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் கேரளா அரசை கண்டித்து, பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்கான மாடுகளை ஏற்றிச்செல்லும் வாகன ஊழியர்கள் "ஸ்டிரைக்கில்' ஈடுபட்டனர். இதனால், பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகள் வர்த்தகம் செய்யப்படாமல் தேக்கமடைந்தன. பொள்ளாச்சி மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் கூறியதாவது: பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் வாரத்தில் ஆறாயிரம் மாடுகள் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சந்தைக்கு இரண்டாயிரத்து 800 மாடுகளுக்கு மேல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. முல்லைப்பெரியாறு பிரச்னை காரணமாக கடந்த ஒருவாரமாக பொள்ளாச்சிக்கு மாட்டு வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு மாடுகளை ஏற்றிச்செல்லும் வாகன ஊழியர்களும், உரிமையாளர்களும் "ஸ்டிரைக்' செய்கின்றனர். இதனால், பொள்ளாச்சியில் இருந்து ஒரு மாடு கூட கேரளாவுக்கு கொண்டு செல்லப்படவில்லை. பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு மாடு கொண்டு செல்ல இயக்கப்படும் 80 லாரிகளும், 20 டெம்போக்களும் நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் வர்த்தகம் ஸ்தம்பித்துள்ளது. மாட்டு வியாபாரிகள் மாடுகளுக்கு தேவையான உணவை கொடுத்து பராமரிக்கின்றனர் என்றனர்.

No comments:

Post a Comment