திருப்பூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், கோகோ-கோலா சார்பில் 16 வயதுக்கு
உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் நடக்கிறது. கோகோ-கோலா
இந்தியா, புரோகாம் இன்டர்நேஷ்னல் இணைந்து தமிழகத்தில், அனைத்து
மாவட்டங்களிலும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி
நடத்துகின்றன. பிற மாவட்டங்களில் மூன்று சுற்று போட்டி முடிவடைந்துள்ளது.
நான்காவது சுற்றாக, திருப்பூர், ஈரோடு, கரூர், திருவாரூர், நாமக்கல்
மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மாதம் முதல் வாரத்தில்
துவங்குகிறது.தமிழக கிரிக்கெட் வாரிய துணை தலைவர் மணிவண்ணன், துணை செயலாளர்
ராமசாமி, திருப்பூர் கிரிக்கெட் அசோஷியேஷன் தலைவர் சந்திரன், புரோகாம்
இன்டர்நேஷனல் இயக்குனர் (செயல்பாடு) சங்கரன், கோகோ-கோலா வட தமிழ்நாடு பொது
மேலாளர் மதுசூதனன் பண்டேஸ்வரா ஆகியோர் கூறியதாவது: இளம் கிரிக்கெட்
வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்
போட்டி, தமிழகத்தில் மாவட்டந்தோறும் நடத்தி வருகிறோம். ஏற்கனவே, 18
மாவட்டங்களில் நடத்தி விட்டு, நான்காவது சுற்றாக, திருப்பூர் உட்பட ஆறு
மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. "நாக்-அவுட்' முறையில் நடக்கும் போட்டி,
அடுத்த மாதம் முதல் வாரத்தில் அந்தந்த மாவட்டத்தில் துவங்கி நடக்கிறது.
இப்போட்டி 40 ஓவர் கொண்டது. இறுதிப்போட்டி, ஜன., 26 முதல் 29 முடிய,
பழங்கரையில் உள்ள "டீ' பப்ளிக் மைதானத்தில் நடைபெறும். வெற்றி பெறும் அணி,
சென்னையில் நடக்கும் போட்டியில் பங்கேற்க வேண்டும். மாநில அளவில்
தேர்வாகும் அணி, டில்லிக்கு சென்று விளையாட வேண்டும். தேசிய அளவில் வெற்றி
பெறும் அணியிலுள்ள எட்டு வீரர்கள், பயிற்சிக்காக இங்கிலாந்து அல்லது
ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுவர். மாநில அளவில் முதலிடம் பெறும் அணிக்கு
ரூ.30 ஆயிரம், இரண்டாவது அணிக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். போட்டிகளை
முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் ஒருங்கிணைத்து நடத்துகிறார், என்றனர்.
No comments:
Post a Comment