Wednesday, 21 December 2011

திருப்பூரில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள்

வழிப்பறி, செயின் பறிப்பு, வீடு புகுந்து திருட்டு போன்ற குற்றச்சம்பவங்கள், திருப்பூரில் அதிகரித்துள்ளது; குற்றங்கள் தடுப்பில், போலீசார் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொழில் நகரமான திருப்பூரில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். தொழில் மற்றும் வர்த்தகம் சார்ந்து தினமும் 1.5 லட்சம் மக்கள், வந்து செல்கின்றனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களின் வாழ்விடமாக திருப்பூர் மாறியுள்ளது.இங்கு, போலீசாருக்கு சவால் விடும் வகையில், பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன; சில சம்பவங்களில் முக்கிய குற்றவாளிகளை உடனடியாக பிடித்து பொது மக்களிடம் "சபாஷ்' பெற்றுள்ளனர் போலீசார். இரு மாதங்களுக்கு முன் "முத்தூட் மினி பைனான்ஸ்' நகை அடகு நிறுவனத்தில் 1,381 பவுன் கொள்ளையடிக்கப்பட் டது. சம்பவம் நடந்த 10 நாட்களில், குற்றவாளிகளை பிடித்தனர்.கடந்த இரு மாதங்களாக, திருப்பூரில் வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள்
அதிகளவில் நடந்து வருகின்றன. குடும்பத்துடன் வெளியூர் செல்பவர்களின் வீடுகளில், பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் உள்ள பணம், நகைகளை திருடர்கள் அள்ளிச் செல்கின்றனர். பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட டூவீலர்கள் மாயமாகியுள் ளன. நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பு, இரவில் வருபவர்களை கத்திமுனையில் மிரட்டி, பணம் பறித்த வழக்குகளும் அதிகளவில் பதிவாகியுள்ளன. இதற்கு, சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பில் தீவிரம் காட்டியதால், குற்றச்சம்பவங்களை தடுப்பதில், போலீசாரின் பணி பாதிக்கப்படுவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "திருப்பூர் "சென்சிட்டிவ்' நகரமாக மாறிவிட்டது; குற்றவாளிகள் பதுங்க வாய்ப்புள்ள சில ஏரியாக்களில் அடிக்
கடி" ஹோமிங் ஆபரேசன்' நடத் தப்படுகிறது. திருப்பூரில் குற்றத்தை செய்துவிட்டு, வெளிமாவட்டங்களில் பதுங்கிக் கொள்கின் றனர். சந்தேகத்துக்குரிய சில முக்கிய குற்றவாளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது; விரைவில் பிடிபடுவர்,' என்றார்.

No comments:

Post a Comment