உடுமலையிலிருந்து மூணாறுக்கு பஸ் இயக்கப்படாததால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கேரளா மாநிலம் மூணாறுக்கு கோவை கோட்டம் சார்பில், பழநியிலிருந்தும்,கோவையிலிருந்தும் 2 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், நேற்று காலை முதல் மூணாறுக்கு பஸ் இயக்கப்படவில்லை. பழநியிலிருந்து இயக்கப்படும் பஸ் மூணாறுக்கு செல்லாமல், மீண்டும் பழநிக்கும் சென்றது. இதுபோன்று, கோவையிலிருந்து வந்த பஸ்சும் மூணாறு செல்லவில்லை. இதனால், பயணிகள் நீண்ட நேரம் பஸ்சிற்காக உடுமலை பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் பஸ் வராததால், பயணிகள் விரக்தியடைந்து திரும்பிச் சென்றனர்.
No comments:
Post a Comment