திருப்பூரில் நொய்யல் ஆற்றை பாதுகாக்க, மக்களிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் இந்தாண்டும் நதிக்கரையில் பொங்கல் விழா கொண்டாட, வளம்
அமைப்பின் நொய்யல் சீரமைப்பு கமிட்டி திட்டமிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி
மலையில் உருவாகும் நொய்யல் ஆறு, திருப்பூருக்குள் நுழைந்ததும்
ஆக்கிரமிப்புகளால் குறுகியும், கழிவுகளாலும் மாசுபடுத்தப்படுகிறது. நகரின்
மத்தியில் ஓடி பெருமை சேர்க்கும் நொய்யலை காக்கும் வகையில் வளம் அமைப்பு
சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின்
நொய்யல் சீரமைப்பு குழு சார்பில், ஆற்றின் கரைகளின் இருபுறமும் ரோடு
அமைக்கப்பட்டது.
புதிதாக பாலம், நடைபாதை, கான்கிரீட் கரைகள் ஏற்படுத்தப்பட்டன. இயற்கை வளமான நதியை காக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்தாண்டு நொய்யல் நதிக்கரையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அதேபோல், இந்தாண்டும் பொங்கல் விழா நடத்த, வளம் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, இருபுறமும் உள்ள ஆற்றின் கரைகள் தூய்மைப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. ஈஸ்வரன் கோவில் பாலம் முதல் அணைக்காடு வரை இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வளம் அமைப்பு சார்பில் ஆற்றின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நொய்யல் சீரமைப்பு கமிட்டி தலைவர் ரத்தினசாமி கூறியதாவது:
வளம் அமைப்பு சார்பில் நொய்யல் நதி சீரமைப்பு பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் மீண்டும், மீண்டும் ஆறு மாசுபட்டு வருகிறது. தற்போது, ரோட்டின் இருபுறமும் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
மாநகராட்சி சார்பில், கழிவு நீர் நேரடியாக கலக்கப்படுவதால், ஆற்று நீர் முழுமையாக மாசடைந்து வருகிறது. ஆற்றில் கழிவு நீர் கலக்காத வகையில் அதிகாரிகள் ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். போதிய விழிப்புணர்வு இல்லாமல், பொதுமக்களும் கழிவுகளையும், மாமிச, மனித கழிவுகளையும் தொடர்ந்து கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர். ஆறு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தாண்டும் பொங்கல் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

No comments:
Post a Comment