வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் துவங்கிட யூஒய்இஜிபி திட்டத்தில் கடன் பெற திருப்பூரில் புதன்கிழமை நேர்காணல் நடக்க உள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன் விடுத்துள்ள அறிக்கை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் யூஒய்இஜிபி திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்கள் அதிகபட்சம் ரூ.5 லட்சமும், சேவைத் தொழில்கள் அதிகபட்சம் ரூ.3 லட்சம், வியாபாரத் தொழில்கள் ரூ.1 லட்சம் திட்டமதிப்பில் தொழில்கள் துவங்கலாம். இத்திட்டத்தின் கீழ் துவங்கப்படும் தொழில்களுக்கு 15 சதவீத அரசு மானியம் அளிக்கப்படும். திட்ட மதிப்பில் பொதுப்பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும். இக்கடன் பெற சொத்துப்பிணையம் தேவையில்லை. இத்திட்டத்தில் கடன்பெற பயனாளிகள் குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். வங்கியில் கடன் ஒப்பளிப்பு பெறுபவர்கள் மேலாண்மை பயிற்சி முடித்தவுடன் இக்கடனும், அதைத்தொடர்ந்து மானியமும் வழங்கப்படும்.இக்கடன் திட்டத்துக்கான விண்ணப்பங்கள், ஆவண இணைப்புகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் துவங்க சாத்தியக்கூறுகள் உள்ள தொழில்திட்டங்களை வலைதளத்திலிருந்து மனுதாரர்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இத்திட்டத்தின் கீழ் இதுவரை மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு புதன்கிழமை (டிச.21) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேர்காணல் நடத்தப்பட உள்ளது. அழைப்புக் கடிதம் பெற்ற மனுதாரர்கள் இந்தநேர்காணலில் பங்கேற்று பயன்பெறலாம். தவிர, நேரடியாக மனுசெய்பவர்களும் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம். தகுதியும், ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், 141 கல்லூரிச்சாலை, ஐயப்பன் கோயில் எதிரில், திருப்பூர் என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0421 2244007 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment