குடிசை மாற்று
வாரியம் சார்பில் அரசு கொடுத்த மானிய நிதியைக் கொண்டு கட்டப்பட்ட வீடுகளை
தற்போது பொதுப்பணித்துறை இடிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனால்,
ஆவேசமடைந்த பயனாளிகள் பொதுப்பணித்துறைக்கு எதிராக போராட களமிறங்கியுள்ளனர்.÷திருப்பூர்
நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள பூலாவரி சுகுமார் நகரில் நீர்நிலை புறம் போக்கு
நிலத்தில் கடந்த 1985-ம் ஆண்டுக்கு முன்பிருந்து நூற்றுக்கணக்கான
குடும்பங்கள் குடிசைகள் அமைத்து வசித்து வந்தனர். பொதுப்பணித்துறை
வசமிருந்த அப்பகுதி நிலங்களை குடிசை மாற்று வாரியம் கடந்த 1996-ல்
வாங்கியதுடன், அந்நிலத்தில் குடிசைகள் அமைத்து நீண்டகாலமாக வசித்து வரும்
குடும்பங்களுக்கே அந்நிலங்களை ஒப்படைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டது. ÷தமிழ்நாடு
புறநகர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 20 ஆண்டு தவணையின் கீழ் குறிப்பிட்ட
தொகை நிர்ணயம் செய்து அக்குடும்பங்களிடம் இருந்து தொகை வசூலித்தது.÷நிர்ணயம்
செய்யப்பட்ட தொகைகளை முழுமையாக செலுத்திய குடும்பங்களுக்கு குடிசை மாற்று
வாரியம் சார்பில் தடையின்மைச் சான்று வழங்கப்பட்டு மின்சாரம், குடிநீர்,
சாலை வசதியும் பெற்றுத் தரப்பட்டது.÷ஒருங்கிணைந்த குடியிருப்பு
மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குடிசைகளில்
வசிக்கும் குடும்பங்களுக்கு அரசின் மானிய நிதியுடன் புதிய குடியிருப்புகள்
கட்டித் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பூலாவரி சுகுமார் நகரில்
குடியிருந்து வந்த சுமார் 75 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டன.÷அக்குடும்பங்களுக்கு
தலா ரூ.72 ஆயிரம் வீதம் அரசு மானியமாக அளிக்க கடந்த திமுக ஆட்சியில்
உத்தரவிடப்பட்டதுடன், முதல் தவணைக்கான காசோலையை 2008 ஜனவரி மாதம் நடந்த
திருப்பூர் மாநகராட்சித் துவக்க விழாவில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியே
பயனாளிகளிடம் வழங்கியுள்ளார்.÷அரசு கொடுத்த ரூ.72 ஆயிரம் நிதியுடன்
கூடுதலாக ரூ.ஒரு லட்சம் வரை செலவிட்டு பயனாளிகள் நல்ல முறையில் வீடுகள்
கட்டிக்கொண்டதுடன், குடிநீர், மின்சாரம், சாலை போன்றவற்றுக்காக தலா ரூ.50
ஆயிரம் வரையும் செலவு செய்து வசித்து வருகின்றனர்.÷கடந்த நவம்பர்
7-ம் தேதி அதிகாலை நொய்யல் ஆறு, சங்கிலிப்பள்ளம், ஜம்மனைப் பள்ளம் ஓடைகளில்
ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து திருப்பூரில் நீர்நிலை புறம்போக்கு
நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளைப் பொதுமக்கள் காலி செய்ய வேண்டும் என்று
பொதுப் பணித்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி,
பூலாவரி சுகுமார் நகரில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அரசு மானிய
நிதியில் கட்டப்பட்ட வீடுகளுக்கும் பொதுப்பணித்துறை ஊழியர்கள்
செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அளித்துள்ளனர்.÷அந்த நோட்டீûஸ அக்குடும்பத்தினர் வாங்க மறுத்ததுடன், கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.÷இதுகுறித்து,
பூலாவரி சுகுமார் நகரில் குடிசைமாற்று வாரிய நிதியுதவியில் வீடு கட்டி
வசிக்கும் சரோஜினி கூறுகையில், அரசு நிர்வாகத்துக்கு உட்பட்ட குடிசை மாற்று
வாரியம் சார்பில் மானிய நிதியளித்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதுடன்,
தடையின்மைச் சான்று அளித்து குடிநீர், மின்சாரம், சாலை வசதியும் செய்து
கொடுக்கப்பட்டது.÷இந்நிலையில், அதே அரசு நிர்வாகத்துக்கு உட்பட்ட
பொதுப்பணித் துறை அவ்வீடுகளை இடிக்க நோட்டீஸ் அளிக்கிறது. இந்த முரண்பாடான
செயல்பாடுகளால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும் மன உளைச்சல்
அடைந்துள்ளோம். தவிர, அரசு கொடுத்த மானிய நிதியைவிட கூடுதலாக செலவிட்டு
வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் திடீரென அவ்வீடுகளை காலி செய்ய வேண்டும்
என்றால் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகும். ஆகவே, இவ்விவகாரத்தில்
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு தெளிவான முடிவு எடுக்க வேண்டும்
என்றார்.÷இதற்கிடையில், பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினர்கள் திருப்பூர் தெற்கு எம்எல்ஏ கே.தங்கவேலை நேரில் சந்தித்து முறையிட்டனர். குடிசை
மாற்று வாரியம் சார்பில் அரசு கொடுத்த மானிய நிதியைக் கொண்டு கட்டப்பட்ட
வீடுகளை பொதுப்பணித் துறை இடிக்க நோட்டீஸ் வழங்கி வருவதால் திருப்பூரில்
பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment